நிரை வலைத்தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசிய சிறுகதைகளின் தளமாகும். நிரை தளத்தில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் இரசனை விமர்சனத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தின் சிறந்த சிறுகதைகளை ஒரே இடத்தில் தேடி வாசிக்கும் வகையில் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதைப்பக்கத்தின் கீழும் அக்கதைக்கான எழுத்தாளரின் தமிழ்விக்கி பக்கமும், கதை ஒலிவடிவில் பதிவாகியிருந்தால் அதற்கான இணைப்பும், கதைகளின் விமர்சனங்கள் பதிவாகியிருந்தால் அதற்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
